FOLLOW US

ON GOOGLE DISCOVER

சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

கனவுகளைக் கொல்வது நியாயமல்ல! பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் எழுந்துள்ள கருத்து குறித்து....

It is not fair to kill dreams! Fans criticize Bigg Boss 10 tamil

தொகுப்பாளர் விஜய் சேதுபதி - எக்ஸ்

Published On :6 செப்டம்பர் 2026, 4:23 pm IST

Bigg Boss 10 tamil: பல கனவுகளோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போட்டியாளர்களை, ஆரம்பத்திலேயே வெளியேற்றுவது நியாயமற்ற செயல் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். ஆனால், இம்முறை பிக் பாஸ் நுழைவதற்கு முன்பே, அறிமுக மேடையில் இருந்தே போட்டியாளர் வெளியேற்றப்படுகிறார் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இம்முறை காமன்மேனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சீசன்களில் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை வாக்குகள் மூலம் மக்களே தீர்மானிப்பார்கள். ஆனால், இம்முறை உள்ளே நுழையும் போட்டியாளர் யார் என்பதையும் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதால், அறிமுக மேடையிலேயே வாக்கெடுப்பு நடத்தி அதில் அதிக வாக்குகள் பெற்ற நடிகரோ அல்லது நடிகையோ மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுகின்றனர்.

Story image

அந்தவகையில் இம்முறை போட்டியாளர்களாகப் பங்கேற்று மேடையில் தோன்றிய நடிகை லஷ்மி பிரியா, சாத்திகா, ஷப்னம், ஆகிய மூவரில் யாரேனும் ஒருவர் மட்டுமே அறிமுக மேடையில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வார். மற்ற இருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது.

Story image

dinamani

இதேபோன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், புவி, பிரஷாந்த், அவினாஷ், அடாவடி அன்சர் என பிரபலர்கள் பலரும் அறிமுக மேடையிலேயே வாக்கெடுப்பு நடத்திய பிறகே உள்ளே அனுப்பப்படுகின்றனர்.

Story image

dinamani

இந்நிலையில், பல கனவுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போட்டியாளரை எந்தவித காரணிகளையும் நிர்ணயிக்காமல் பிக் பாஸ் வீட்டிற்குள் கூட விடாமல் வெளியே அனுப்புவது நியாயமல்ல என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Story image

அரங்கத்தில் இருப்பவர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள் எனத் தெரிகிறது. இதனால், தங்களுக்குப் பிடித்தமான நடிகை, நடிகரால் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய முடியவில்லை என சமூக வலைதளப் பக்கத்தில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பல கனவுகளோடு ஒரு பயணத்தை ஆரம்பிக்கும் பொழுதே அவரை அழைத்து பிறகு அவரை வெளியேற்றுவது மிகவும் தவறு என ஒருவர் கருத்திட்டுள்ளார்.

Summary

It is not fair to kill dreams! Fans criticize Bigg Boss 10 tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.