சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

மாற்றப்படும் விதிகள்! காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸுக்கு செல்லும் 3 பேர்!

காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸுக்கு செல்லும் 3 பேர் குறித்து...

விஜய் சேதுபதி

பிக் பாஸ் 10 - படம்: எக்ஸ்

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:29 pm IST

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து, பிக் பாஸ் 10 சீசன் நிகழ்ச்சிக்கு 3 பேர் பங்கேற்கவுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும்.

வார வாரம் நடக்கும் எலிமினேஷனில்(வெளியேற்றம்) மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.

விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாமல் மனரீதியாக நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிப் பெற வேண்டும்.

இம்முறை பொதுமக்கள் (பிக் பாஸ் காமன் மேன்) பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், வெற்றி பெறுபவர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் நேரடியாக 3 பேர் பங்கேற்கவுள்ளனர்.

பிக் பாஸ் - காமன் மேன் நிகழ்ச்சி ஆக. 16 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். அதேபோல, முன்னாள் போட்டியாளர்கள் ஓவியா, ராஜு, ஆரி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனின் சில விதிகள் மாற்றப்பட்டு, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Three individuals from the 'Bigg Boss Common Man' show are set to participate in Season 10 of Bigg Boss.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.