விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும், மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிகழ்ச்சியான பிக் பாஸ் 10வது சீசன், நிகழ்ச்சியின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும்.
வார வாரம் நடக்கும் எலிமினேஷனில்(வெளியேற்றம்) மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.
விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாமல் மனரீதியாக நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிப் பெற வேண்டும்.
இம்முறை பொதுமக்கள் (பிக் பாஸ் காமன் மேன்) பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், கலந்துகொண்டு வெற்றி பெற்றால், நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் நேரடியாகப் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் - காமன் மேன் நிகழ்ச்சி ஆக. 16 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். அதேபோல, முன்னாள் போட்டியாளர்கள் ஓவியா, ராஜு, ஆரி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 10வது சீசன் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
A preview video has been released for the 10th season of Bigg Boss, the popular show aired on Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிக் பாஸ் - காமன் மேன் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு! நடுவர்களாக ஓவியா, ஆரி, ராஜு!

பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் மாயா கிருஷ்ணன்!

பிக் பாஸ் - 10 ஒளிபரப்பு எப்போது?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் செளரவ் கங்குலி!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK




