
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாண்டி! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் பிளாக் பாண்டி குறித்து...

நடிகர் பிளாக் பாண்டி - படம்: எக்ஸ்
பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் பிளாக் பாண்டி வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப். 6 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்த சீசனில் நேர்காணலில் தேர்வான போட்டியாளர்கள் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மாறாக, மூன்று போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு, மேடையில் நிற்கவைக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் இருவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
குறைந்த வாக்குகளைப் பெற்ற 8 நபர் மேடையில் இருந்தவாறே வெளியேற்றப்பட்டனர். 19 பேர் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டனர்.
லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், ஸ்வானிகா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார் ஆகிய 19 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இவர்களில் ஷாமா, ஜேசன், முனியம்மாள் ஆகிய 3 பேர் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
இந்த வார தலைவராக நடிகை ஷாதிகா தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகளின்படி இவர் தனக்கான ஆளும் அணியைத் தேர்வு செய்துள்ளார். எஞ்சிய போட்டியாளர்கள் எதிர் அணியினராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமையல் அணியில் இருந்த நடிகர் பிளாக் பாண்டிக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவர் மீண்டும் வைல்டு கார்டு மூலம் வருவாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Summary
Reports indicate that actor Black Pandi has been eliminated from the Bigg Boss 10 show.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




