FOLLOW US

ON GOOGLE DISCOVER

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பிக் பாஸ் 10: மகாநதி சீரியலில் இருந்து பங்கேற்கும் போட்டியாளர்கள் அதிகம்!

மகாநதி தொடரின் நான்கு பெண்களில் 2 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறித்து...

mahanadhi serial Lakshmi priya sathika in bigg boss 10

லஷ்மி பிரியா / ஷாதிகா - எக்ஸ்

Published On :7 செப்டம்பர் 2026, 5:30 pm IST

மகாநதி தொடரின் நான்கு பெண்களில் 2 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மகாநதியில் நடித்த லஷ்மி பிரியா, சாதிகா ஆகியோர் பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இவர்களுக்கு சக நடிகைகளான ஸ்வேதா குமார், தாரணி ஹெப்சிபா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் உள்பட தெலுங்கு, கன்னடம், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று (செப். 6) கோலாகலமாகத் தொடங்கியது. தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் என்றாலே வித்தியாசம், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதால், இம்முறை மிகுந்த வித்தியாசமாக மேடையில் இருந்தே போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

எப்போதுமே போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இம்முறை எந்த போட்டியாளர் உள்ளே செல்ல வேண்டும் என்பதற்கே மக்கள் வாக்களிக்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மக்கள் பிரதிநிதிகளாக பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷாமா, முனியம்மா, ஜேசன் ஆகிய 3 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் முதல் நாளில்... லஷ்மி பிரியா

பிக் பாஸ் முதல் நாளில்... லஷ்மி பிரியா

வழக்கமாக சின்ன திரை தொடர்களில் இருந்து அதிக போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம். இம்முறை லஷ்மி பிரியா, குமரன் தங்கராஜ், சாதிகா, வினோத் பாபு, முத்தழகி, அவினாஷ் ஆகியோர் மட்டுமே சின்ன திரை தொடர்களில் நடித்தவர்கள்.

பிக் பாஸ் முதல் நாளில்... ஷாதிகா

பிக் பாஸ் முதல் நாளில்... ஷாதிகா

இதில் நடிகை லஷ்மி பிரியா, ஷாதிகா ஆகிய இருவருமே வெற்றித் தொடரான மகாநதியில் நடித்தவர்கள். இத்தொடரில் இவர்களின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

கடந்தமுறை மகாநதியில் இருந்து திவ்யா கணேசன், கமருதீன், ஆதிரை ஆகிய மூவர் போட்டியாளர்களாக பங்கேற்றிருந்த நிலையில், இம்முறை இருவர் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த இரு சீசன்களில் மகாநதி தொடரில் இருந்து மட்டும் 5 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

mahanadhi serial Lakshmi priya sathika in bigg boss 10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.