தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பிக் பாஸ் சீசன் 10 முதல் போட்டியாளர் லஷ்மி பிரியா! சாதிகாவுடன் ஆட்டம் ஆரம்பம்!

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் போட்டியாளர் குறித்து....

லஷ்மி பிரியா

Published On :6 செப்டம்பர் 2026, 6:57 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகை லஷ்மி பிரியா கலந்துகொண்டுள்ளார்.

நிஜ வாழ்க்கையில் நிறைய போட்டிகளை சந்தித்துள்ளதால், பிக் பாஸ் போட்டி சவாலானதாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று (செப். 6) தொடங்கியது. விஜய் சேதுபதி மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனில் முதல் போட்டியாளராக லஷ்மி பிரியா அழைக்கப்பட்டுள்ளார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மேடையின் ஒருபுறத்திலேயே காக்கவைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சாதிகா, ஷப்னம் என இருவர் அழைக்கப்பட்டனர். மூவரும் நேரடியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாறாக அரங்கத்தில் இருந்த மக்கள் வாக்களித்து, அதில் அதிக வாக்குகள் பெற்ற இருவர் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

இதில் அதிக வாக்குகள் பெற்று முதல் போட்டியாளராக லஷ்மி பிரியா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். இதனைத் தொடர்ந்து சாதிகா இரண்டாவது போட்டியாளராக உள்ளே சென்றார்.

Summary

Lakshmi Priya is the first contestant of Bigg Boss Season 10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.