தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பிக் பாஸ் 10: போராடி வீட்டிற்குள் நுழைந்த 3 காமன்மேன்கள்!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளாக 3 பேர் பங்கேற்றுள்ளது குறித்து...

Bigg Boss 10 Three common man who fought their way into the house

முனியம்மா - எக்ஸ்

Published On :6 செப்டம்பர் 2026, 8:03 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளாக 3 பேர் பங்கேற்றுள்ளனர். பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 8 பேரில் மூன்று பேர், பிரபலங்கள் பங்கேற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று (செப். 6) தொடங்கியது. விஜய் சேதுபதி மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனில் போட்டியாளர்கள் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் புதுமையை வெளிக்காட்டும் விதமாக மூன்று போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரங்கத்தில் இருக்கும் மக்கள் மூவருக்கும் வாக்களிப்பார்கள். இதில் அதிக வாக்குகள் பெற்ற இருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அதாவது, மற்ற சீசன்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இம்முறை புதுமையாக, போட்டியாளர்கள் உள்ளே செல்வதற்கே மக்கள் வாக்களிக்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மகாநதி தொடர் நாயகி லஷ்மி பிரியா, சாதிகா, ஜெர்மனி மாணவர் பிருத்விநாத், கார்ப்பரேட் ஊழியர் ஜாவித் ஆகியோர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஷபானா, முனியம்மா, ஜேசன் ஆகிய மூவர் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் 8 பேர் வெற்றி பெற்ற நிலையில், அந்த 8 பேரில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.

Summary

Bigg Boss 10 Three common man who fought their way into the house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.