
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி பிரியா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை லட்சுமி பிரியா வெளியேறியது குறித்து...

பிக் பாஸ் முதல் நாளில்... லஷ்மி பிரியா - படம்: ஹாட்ஸ்டார்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் - 10 நிகழ்ச்சியில் இருந்து நடிகை லட்சுமி பிரியா வெளியேறி இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்களாக லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவின்யா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார் ஆகிய 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 3வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணியின் தலைவராக(கேப்டன்) அவினாஷ் தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக ராகவ் தேர்வு செய்யப்பட்டார்.
அரசியல் சட்டப்பேரவையை பிரதிபலிக்கும் விதமாக ஜனநாயக அறை அமைக்கப்பட்டு, பிக் பாஸ் வீட்டுக்குள் விதிகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இந்த சீசனில் புதிதாக, பிக் பாஸ் வீட்டின் கேப்டன் அதாவது ஆளும் அணியின் தலைவர், போட்டியார்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் வீட்டை வீட்டு வெளியேறும் மூன்று பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுக்கு சக போட்டியாளர்கள் வாக்களிக்க வேண்டும். குறைந்த வாக்குகளை பெற்ற நபர், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
அந்த அடிப்படையில் இந்த வாரம் லீடர் எக்ஸிட் பட்டியலில் இருந்த லட்சுமி பிரியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
லட்சுமி பிரியா இறுதிப் போட்டிக்கு செல்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறுகிய நாள்களில் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரங்களில் சவின்யா, பிளாக் பாண்டி, ஜாவித், மணிவண்ணன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Reports indicate that actress Lakshmi Priya has been eliminated from the Bigg Boss show currently airing on Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







