பிக் பாஸ் 10 : லட்சுமி பிரியாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஆனந்தியிடம் கடுமையாக நடந்துகொண்ட லட்சுமி பிரியாவுக்கு குவிந்துவரும் விமர்சனங்கள் குறித்து...

Lakshmi Priya should be given a red card

லட்சுமி பிரியா தள்ளிவிட்டதில் காயமடைந்து கீழே விழுந்த ஆனந்தி - எக்ஸ்

Published On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை ஆனந்தியிடம் கடுமையாக நடந்துகொண்ட லட்சுமி பிரியாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியின்போது, லட்சுமி பிரியா தள்ளிவிட்டதில் காயமடைந்த ஆனந்தியை சக போட்டியாளர்கள் மருத்துவ உதவிக்காக தூக்கிச் சென்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 2 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான ஆளும் அணியின் தலைவராக ஷமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது நளான இன்று சீஸ் டாஸ்க் போட்டி வைக்கப்பட்டது. அதாவது, சீஸ் போன்று வடிவமைக்கப்பட்ட இடத்தில் கடைசிவரை உள்ளே இருக்கும் போட்டியாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இதனால் சக போட்டியாளர்கள் ஒருவரையொருவர் தள்ளிவிட்டு அந்த இடத்தைப் பிடிக்க முயற்சித்தனர். இதில் நடிகை ஆனந்தியிடம் லட்சுமி பிரியா கடுமையாக நடந்துகொண்டார். ஆனந்தியை தள்ளிவிட்டதில் அவர் காயமடைந்தார். இதனை அடுத்து சக போட்டியாளர்கள் ஆனந்தியை மருத்துவ உதவிக்கு தூக்கிச் சென்றனர்.

இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி கடுமையாக நடந்துகொண்ட லட்சுமி பிரியாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் அந்த விடியோவில் பதிவிட்டு வருகின்றனர்.

போட்டியின்போது ஆனந்தியை இரண்டு முறை தாக்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி இதற்கு முன்பு, ஆனந்தி சமைத்துக்கொடுப்பதை உண்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என லட்சுமி பிரியா கூறியிருந்தார்.

இவ்வாறு ஆனந்தியிடல் நடந்துகொண்ட லட்சுமி பிரியாவின் செயல்களை ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

Summary

bigg boss 10 Knockout task Lakshmi Priya should be given a red card

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.