டிரம்ப்பிடம் மண்டியிட முடிவு செய்துள்ளார் பிரதமர்: யுபிஐ கட்டணம் குறித்து ராகுல் விமர்சனம்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்த விவகாரம் குறித்து பேசிய ராகுல் காந்தி, “டிரம்ப்பிடம் பிரதமர் மண்டியிட முடிவு செய்துள்ளார்” என்று தெரிவித்தது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப்.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்த விவகாரம் குறித்து புதன்கிழமை (செப். 16) பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “டிரம்ப்பிடம் பிரதமர் மண்டியிட முடிவு செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.
யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான புதிய விதிமுறையை மத்திய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும். அதேபோல, ரூ. 75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ. 300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியதாவது:
”முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம், நீங்கள் இடது பக்கம் சாய்கிறீர்களா அல்லது வலது பக்கம் சாய்கிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, 'நான் இடது பக்கமும் சாய்வதில்லை. வலது பக்கமும் சாய்வதில்லை, நான் நேராக நிற்கிறேன்' என்பதே அவரது பதிலாக இருந்தது.
ஆனால், பிரதமர் மோடியின் கருத்து முற்றிலும் வேறுபட்டது. அவர் இடது பக்கமும் இல்லை; வலது பக்கமும் இல்லை. அவர் நேராகப் படுத்து, டொனால்ட் டிரம்புக்கு முன்னால் மண்டியிட முடிவு செய்துள்ளார்.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்ததன் மூலம், ஒவ்வோர் இந்தியரின் மீதும் மோடி வரி விதித்துள்ளார். மேலும், இதன்மூலம் அமெரிக்காவுக்கு அவர் ஒரு பெரிய நிதியை வழங்கவுள்ளார்.
எனவே, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் முடிவை பிரதமர் மோடி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Modi ji, roll back the UPI tax. Now. pic.twitter.com/IIt46zMgCG
— Rahul Gandhi (@RahulGandhi) September 16, 2026
Summary
Speaking on Wednesday (Sept. 16) regarding the issue of charges being levied on UPI transactions, Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi stated, "The Prime Minister has decided to kneel before Trump."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








