மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்: திரும்பப்பெற வாய்ப்பில்லை!

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்த முடிவை திரும்பப்பெற வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிப்பது குறித்து...

UPI

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்த முடிவை திரும்பப்பெற வாய்ப்பில்லை. - பிரதிப் படம்

Published On :

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்த முடிவை திரும்பப்பெற வாய்ப்பில்லை என அரசின் உயர்நிலை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுபிஐ தொடர்பான புதிய விதிமுறையை மத்திய அரசு நேற்று(செப். 15) அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ. 2,000-க்கு மேற்பட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும்.

அதேபோல, ரூ. 75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ. 300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என கடைக்காரர்கள், வணிகர்கள் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் அரசு ஏற்கெனவே ஒரு முடிவை எடுத்துவிட்டது. எனவே, அந்த முடிவைத் திரும்பப்பெற வாய்ப்பில்லை என அரசின் உயர்நிலை அதிகாரிகள் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், யுபிஐ அமைப்பின் நலனைக் கருத்தில் கொண்டும், அதன் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்தக் கட்டணங்களை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

Summary

Reports indicate that high-ranking government officials have stated there is no likelihood of withdrawing the decision to impose charges on UPI transactions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER