பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம்: புதிய பிரசாரத்தை தொடங்கும் சிஜேபி!

பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம் என்ற புதிய பிரசாரத்தை சிஜேபி தொடங்கவுள்ளது குறித்து...

Abhijit Deepke

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Published On :

பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம் (ஆதிவாசி ஸ்கூல் திக் கரோ) என்ற புதிய பிரசாரத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடங்கவுள்ளதாக அதன் தலைவர் அபிஜீத் தீப்கே புதன்கிழமை(செப். 16) தெரிவித்தார்.

நீட் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஸ்கூல்திக்கரோ (பள்ளிகளைச் சீரமைப்போம்) எனும் பிரசாரத்தை கடந்த மாதம் தொடங்கினர்.

இதன்மூலம் நாடு முழுவதிலும் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், அதை விடியோவாக பதிவு செய்வது, உரிய அதிகாரிகளிடம் புகார் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பழங்குடியினருக்கான பள்ளிகள் குறித்து செய்தியாளர்களிடம் அபிஜீத் தீப்கே பேசியதாவது:

கடந்த 80 ஆண்டுகளாக பழங்குடியினருக்கான பள்ளிகளை அரசு புறக்கணித்து வருகிறது. எனவே, பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம் எனும் பிரசாரத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி பகுதியில் நாங்கள் நாளை (செப். 17) தொடங்கவுள்ளோம்.

இதன்மூலம், சிஜேபி பிரதிநிதிகள் நாட்டில் உள்ள பழங்குடியினருக்கான பள்ளிகளின் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்வோம்.

பழங்குடியின மாணவர்களை அனைத்து அரசாங்கமும் புறக்கணித்துள்ளது. அரசியல் கட்சிகள் தனது கட்சி அலுவலகங்களை கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டமைக்கிறது. ஆனால், பெரும்பாலும் வாடகைக் கட்டடங்களில் இருந்து இயங்கும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளிகளுக்குக் கொடுக்க அவர்களிடம் நிதி இல்லை என்று அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்.

Summary

Abhijit Deepke, leader of the 'Karappanpoochi Janata Party', announced on Wednesday (Sept. 16) that the party is set to launch a new campaign to revamp schools for tribal communities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.