2024-ன் தாதாசாகேப் பால்கே விருது பெறுகிறார் அனந்த் நாக்! பிரதமர் மோடி வாழ்த்து!

பழம்பெரும் நடிகர் அனந்த் நாக்-க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

பழம்பெரும் கன்னட நடிகர் அனந்த் நாக் - கோப்புப் படம்

Published On :

2024 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது பழம்பெரும் கன்னட நடிகர் அனந்த் நாக்-க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த பழம்பெரும் கன்னட நடிகர் அனந்த் நாக் திரையுலகில் அறிமுகமாகி 53 ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ளார். மேலும், 270 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் மராத்திய ஆகிய மொழிகளின் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியத் திரைப்படத்துறைக்கான அவரின் பங்களிப்பைப் பாராட்டி 2024 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் அனந்த் நாக்-க்கு வழங்கப்படும் என இன்று (செப். 16) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் அனந்த் நாக்-க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கலைஞர் அனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள்.

அவரது இயல்பான நடிப்பு, பன்முகத்தன்மை மற்றும் அபாரத் திறமை ஆகியவை இந்தியத் திரையுலகிலும், கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளன.

அவரைப் போன்ற மிகச் சிறந்த கலைஞருக்கு இது மிகவும் தகுதியான ஒரு கௌரவமாகும்” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, வரும் செப். 22 ஆம் தேதி குஜராத்தில் நடைபெறவுள்ள 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் அனந்த் நாக்-க்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Dadasaheb Phalke Award for the year 2024 will be presented to veteran Kannada actor Anant Nag.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.