மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

விஜய் - அஜித்தை பின்னுக்குத் தள்ளிய சூர்யா! நட்பைக் கொண்டாடுவோம்! காதல்னு வந்துட்டா...

விஜய் - அஜித்தை பின்னுக்குத் தள்ளிய சூர்யா - ஜோதிகா விடியோ பற்றி..

லைக்குகளை அள்ளும் விடியோ

லைக்குகளை அள்ளும் விடியோ

Published On :

லண்டன் சென்றிருக்கும் தமிழக முதல்வர் விஜய் - நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து கட்டியணைத்த விடியோவை தவெகவினர் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில், சப்தமே இல்லாமல் அதனை முறியடித்துவிட்டனர் சூர்யா - ஜோதிகா.

வரலாற்றிலேயே இப்படியொரு சந்திப்புக் கூட்டணி நடந்ததேயில்லை என்று, விஜய் - அஜித் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருந்தது.

சமூக வலைத்தளத்தில் அஜித் - விஜய் இணைந்து வெளியிட்ட அந்த விடியோவுக்கு செப். 16ஆம் தேதி மாலை வரை 23 லட்சம் பேர் லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை என்று தவெகவினர் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அந்த கொண்டாட்டம் சில நாள்கள்கூட நீடிக்கவில்லை. நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா, தங்களது காதல் வாழ்வின் 20ஆம் ஆண்டு நிறைவை வெகு சிறப்பாக, புதிய வகையில் கொண்டாடியிருக்கிறார்கள்.

சூர்யா - ஜோதிகா இணையின் திருமண பந்தம் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகம், சினிமா பாணியில் சொன்னால் 2.0 போல 'தொடர்ச்சி’ (The Sequel) என்ற பெயரில் திருமண உறுதிமொழி புதுப்பித்தல் நிகழ்ச்சியை நடத்தி அது தொடர்பான விடியோவை வெளியிட்டிருந்தார்கள்.

இந்த விடியோ வெளியாகி 20 மணி நேரங்களில் 46 லட்சம் லைக்குகளை வாரிக்குவித்துள்ளது. இன்னும் லைக்குகளை அள்ளிக் கொண்டே இருக்கிறது.

அந்த விடியோவில், இது எங்களின் குறைகள், விட்டுக்கொடுத்தல், புரிதல்கள், தியாகங்கள் மற்றும் சுயநலமின்றி ஒருவரையொருவர் நேசித்ததன் கொண்டாட்டம். இது எங்களுக்கான கொண்டாட்டம். நாங்கள் ஒருவருக்காக ஒருவர் மாறியதன் கொண்டாட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளது. காதலின் 20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில், இருவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், காதல் ரசிகர்களும் களமிறங்கினர். இந்த விடியோக்கள் பலராலும் எந்த பேதமும் இன்றி ரசிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஹீரோக்களுக்கு இடையேயான நட்பா? சூர்யா - ஜோதிகா காதலா என்ற விடியோ போட்டி சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கிறது. இதில் தற்போதுவரை காதல்தான் கொடிகட்டிப் பறக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.