ஜார்க்கண்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வாணயம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைக்கேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூலை 29 முதல் ராஞ்சியிலுள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த முறைக்கேடுகள் குறித்து பிற மாநிலங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஒரு தனிக்குழுவை அமைத்து தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு சிஜேபி ஆதரவளிக்கும் எனவும், சிஜேபி உறுப்பினர்கள் ராஞ்சிக்கு நேரில் சென்று மாணவர்கள் போராட்டத்தில் துணை நிற்பார்கள் எனவும் அபிஜீத் தீப்கே இன்று (ஆக. 5) தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, மகாராஷ்டிரத்தில் செய்தியாளர்களுடன் அபிஜீத் தீப்கே கூறியதாவது:
“நீதித்துறை, அரசியல், ஊடகம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எங்கள் போராட்டத்துக்கு தேசிய அளவில் ஆதரவு கிடைத்தது.
போராட்டம் வளருகையில், வெறும் கல்விச் சார்ந்த விவகாரங்களுக்கு மட்டுமின்றி கல்வி நிறுவனங்களையும் எதிர்த்துதான் போராட்டம் நடைபெற்றது. எனவே, கல்வி நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த ஒரு பொது அழுத்தக்குழுவின் தேவை உள்ளது.
தற்போதைக்கு சிஜேபி ஒரு அழுத்தக்குழுவாகச் செயல்படும். ஏனென்றால், இந்தியாவுக்கே இப்போது ஒரு அழுத்தக்குழு தேவைப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
Summary
Abhijit Deepke, founder of the cjp, has announced his support for the ongoing student protests against the government in Jharkhand.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேள்விகளுக்குத் தடியடிகளால் பதில் அளிக்காதீர்: பிரதீப் ரங்கநாதன்

ரேவதி, அதிதி ராவ்... சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் நடிகர்கள்!

சிஜேபி போராட்டம்: இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர்கள்!

உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு!
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்..நிதிஅமைச்சர் முழு உரை| CM Vijay | TVK | TN Budget 2026- 2027




