கேள்விகளுக்குத் தடியடிகளால் பதில் அளிக்காதீர்கள் என்று தில்லியில் நடைபெற்று வரும் சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை நடத்திய ‘நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம்’ (சன்சத் சலோ) என்ற பேரணியால் மத்திய தில்லி முழுவதும் பதற்றம் நிலவியது. கல்வீச்சு, காவல் துறை தடியடி போன்ற சம்பவங்கள் அரங்கேறின.
போராட்டக்காரர்கள் தடுப்புகளை முட்டித் தள்ளி முன்னேற முயன்றதால் அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தினரைக் கலைக்க மத்திய துணை ராணுவப் படையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர்.
தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு தமிழ் உள்பட தென்னிந்திய நடிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றது.
ரேவதி, சித்தார்த், பா. ரஞ்சித் உள்ளிட்டோரைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Summary
Actor and director Pradeep Ranganathan has posted in support of the ongoing CJP protest in Delhi, urging that questions not be answered with baton charges.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











