கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தனது உண்ணாவிரதத்தை திங்கள்கிழமை முடித்துக் கொண்டார்.
இதனிடையே, சிஜேபி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் நிர்வாகி அஷுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டாவைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மேற்கொண்ட போராட்டம் இன்று தீவிரமடைந்துள்ளது.
ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தில்லியின் பல்வேறு பகுதிகளில் சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்தத் தொடங்கிய நிலையில், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை வாயில்கள் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சோனம் வாங்சுக்கின் வேண்டுகோளை ஏற்று, காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அபிஜீத் தீப்கே இன்று முடித்துக் கொண்டார்.
தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி 21 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக்கை, வலுக்கட்டாயமாக கடந்த ஜூலை 18 ஆம் தேதி தில்லி காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஜூலை 18 முதல் அபிஜீத் தீப்கே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே, சௌரவ் தாஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”தற்போது நேரம் காலை 11.52. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக நானும் அசுதோஷ் ரங்காவும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவைச் சந்திக்க சென்று கொண்டிருக்கிறோம்.
பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு இன்று காலை எங்களைத் தொடர்புகொண்டது. எங்கள் கோரிக்கைகள் தெளிவாக உள்ளது. இளைஞர்கள் பெருந்திரளாகக் கூடியுள்ளனர். நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Abhijit Deepke has ended his fast - CJP office-bearers met J.P. Nadda
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










