FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

அனுபமா பரமேஸ்வரன் பேச்சால் நடிகரை விமர்சிக்கும் ரசிகர்கள்! பதில் அளிப்பாரா?

அனுபமா பரமேஸ்வரன் நேர்காணல் பேச்சு வைரலாகியுள்ளது...

News image

அனுபமா பரமேஸ்வரன்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 5:03 pm IST

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேச்சால் ரசிகர்கள் சம்பந்தப்பட்ட நடிகரைச் சாடி வருகின்றனர்.

நடிகை அனுபமா பரமேஸ்வரனும் இளம் தமிழ் நடிகரும் காதலித்து பின் பிரிந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அனுபமா நேர்காணலில் இக்காதல் ஏன் பிரிவை நோக்கிச் சென்றது என்பதைக் குறித்து பேசினார்.

முக்கியமாக, “நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மைத் துன்புறுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன். ஆனால், இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலம் ஆகிவிட்டது.

நினைத்துப் பாருங்கள், ஒருநாள் அவர் ரெமோ. அப்படியொரு காதல்... நாம் மிக கொடுத்த வைத்த ஆள் என்கிற அளவுக்கு கனவுகள் துளிர்க்கும். அடுத்த நாள், அந்நியனாகிவிடுவார்; மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும். பின், அம்பியாக மாறி அழுது, கெஞ்சி நம்மை சமாதானப்படுத்துவார். நடிகை மடோனா செபாஸ்டியன் தன் நார்ஸிஸ்ட் காதல் அனுபவங்கள் குறித்து பேசிய போதுதான், நாமும் இப்படியான சூழ்நிலையில்தான் இருக்கிறோம் என்பதை நினைத்து நடுங்கினேன்.” எனக் கூறியிருந்தார்.

அனுபமாவின் இப்பேச்சைக் கேட்ட பலரும் அந்த நடிகர் இவ்வளவு மோசமானவரா? என்கிற ரீதியில் அவரைத் தாக்கி பதிவிடுவதுடன் அந்த நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருக்கும் புகைப்படங்களில், ’நச்சுத்தன்மை வாய்ந்தரா நீங்கள்?’, ‘உங்கள் தரப்பு குறித்தும் பேசுங்க’ என விமர்சித்து வருகின்றனர்.

தகவல்களாக இருந்த காதல் விவகாரத்தை அனுபமா குற்றச்சாட்டுகளாக அடுக்கி தன் தரப்பை விளக்கியுள்ளதால் அந்த நடிகர் இதுகுறித்து ஏதாவது தெரிவிப்பாரா? என ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்புகின்றனர். அதேநேரம், அனுபமாவையும் சிலர் விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Fans are lashing out at the actor in question following remarks made by actress Anupama Parameswaran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.