மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நிஜ வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, ராஜி!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை ஹேமா போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளது குறித்து...

actress Hema shalini

நடிகைகள் ஹேமா, ஷாலினி - இன்ஸ்டாகிராம்

Published On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ஹேமா பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ராஜி பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை ஷாலினி, திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன்மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த இருவர் தங்கள் நடிப்புத் துறையில் அடுத்தகட்டத்துக்குச் செல்லவுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து தற்போது கதை நகர்கிறது. இத்தொடரில் மூத்த மருமகளாக மீனா பாத்திரத்தில் ஹேமாவும், இளைய மருமகளாக ராஜி பாத்திரத்தில் நடிகை ஷாலினியும் நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில்... - இன்ஸ்டாகிராம்

இதனிடையே பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை ஹேமா பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்ன திரை பிரபலங்கள் பிக் பாஸில் பங்கேற்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், இம்முறை ஹேமா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று நடிகை ஷாலினியும் கவின் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவந்த இரு நடிகைகள் அடுத்தகட்டத்துக்குச் செல்லவுள்ளதாக ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

actress Hema participate as a contestant in Bigg Boss Season 10 vijay tv shalini act with kavin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.