மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

குரங்குடன் சேட்டை செய்யும் சியான் விக்ரம்!

நடிகர் விக்ரம் குரங்குடன் பேசும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

குரங்குடன் சேட்டை செய்யும் சியான் விக்ரம்

Published On :

நடிகர் விக்ரம் குரங்குடன் பேசும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

நடிகர் விக்ரம் கடைசியாக நடித்த வீர தீர சூரன், தங்கலான் போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து, அவர் இருமுகன் படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சியான் - 63 எனக் குறிப்பிடப்படும் இப்படத்தில் தயாரிப்பாளரும், நடிகையுமான ரியா ஷிபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

முழு நீள ஆக்‌ஷன் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ள விக்ரம் தனது 30-களில் இருந்ததைப் போன்று உருமாறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் இப்படத்திற்கான கெட்-அப்பில் விக்ரம் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகின.

இந்த நிலையில், குரங்குடன் விளையாடும் விடியோ ஒன்றை விக்ரம் இன்று பதிவிட்டுள்ளார். குரங்கிடம் பேசிக்கொண்டு அதைப் போன்றே பாவனைகள் செய்யும் அவரது விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இதற்கு முன்னதாக தனது வீட்டில் வளர்க்கும் கிளியுடன் பேசும் விடியோவை விக்ரம் பகிர்ந்திருந்தார்.

Summary

A video of actor Vikram talking to a monkey has gone viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.