நடிகர் விக்ரம் பிரபுவின் 26ஆவது திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார்.
நடிகர் பிரவின் மகனான விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, டாணாக்காரன், சிறை ஆகிய வெற்றிப் படங்களில் கவனம் பெற்றார்.
கடைசியாக வெளியான சிறை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது, தனது 26ஆவது படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக விக்ரம் பிரபு கூறியுள்ளார்.
தங்கக் கட்டியில் இருந்து உருகி வழிய அதில் ரத்தத்துடன் கால்தடங்கள் இருக்கும்படியான போஸ்டரை விக்ரம் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகுமென அந்தப் பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Here we go with a bloody tale ð¥
— Vikram Prabhu (@iamVikramPrabhu) June 23, 2026
Romeo Pictures presents #VikramPrabhu26
produced by @mynameisraahul @Romeopictures_
So excited to work with my dear brother again @thisisysr @U1Records ð¥
Direction @just_sid_here pic.twitter.com/CULiIMUGX8
Summary
Vikram Prabhu 26 film official update
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






