16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்து...

Published On :

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழின் முன்னணி இயக்குநர்கள் இணையான புஷ்கர் - காயத்ரி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்னதாகவும் அது எஸ்கேவுக்குப் பிடிக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளாராம். இப்படத்திற்கான பூஜையும் நடைபெற்று முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பார்க்கிங் திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். அப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Sivakarthikeyan is set to act under the direction of Ramkumar Balakrishnan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER