ஏஐ மூலம் ஆபாச படங்களாகும் சினிமா காட்சிகள்! தடுக்கப்படுமா?
சினிமா காட்சிகளை ஆபாச படங்களாக மாற்றுவது குறித்து...

தமிழ் சினிமாவின் பிரபலமான சில காட்சிகளை ஏஐ உதவியுடன் ஆபாச படங்களாக உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
ஏஐ பயன்பாடுகள் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கும் விரைவான செயல் திறன்களுக்கும் பயன்படுவதைத் தொழில்நுட்ப மாற்றங்களாக ஏற்றுக்கொண்டாலும் சிலர் இதனை மிகத் தவறுதலாகப் உபயோகிக்கவும் செய்கின்றனர்.
ஆரம்பத்தில் நடிகைகளின் புகைப்படங்களை ஆபாசமாகவும் கவர்ச்சியாகவும் சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இது பலருக்கும் அதிருப்தியைக் கொடுத்தது.
எது போலி, எது நிஜம் எனக் கண்டறிய முடியாத துல்லியத்தால் இந்த போலி ஏஐ புகைப்படங்களுக்கு எதிராக நடிகை ரஷ்மிகா மந்தனா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், அடுத்தகட்டமாக தமிழ் சினிமாவின் சில காட்சிகளை ஏஐ மூலம் ஆபாச படங்களாக மாற்றி சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக டியூட், வல்லவன் திரைப்படக் காட்சியை ஆபாச படங்களாக மாற்றியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை புகைப்படங்களாக மட்டும் தொந்தரவுகள் வந்த நிலையில் சினிமா காட்சிகளையும் அதில் நடித்த நடிகர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக இந்த விடியோக்களை உருவாக்கியவர்களைக் கடுமையாகத் தண்டித்தால் மட்டுமே இது போன்ற விடியோக்களைத் தடுக்க முடியும் எனக் கோரிக்கைகள் எழுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுப்பார்களா?
Some well-known scenes from Tamil cinema are being transformed into pornographic images with the help of AI and then published.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


