பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ் சினிமாவின் நூறாண்டு கால வரலாற்றில்..!

ஜெயிலர் - 2 இமாலய வசூலைச் செய்துள்ளது...

நடிகர் ரஜினிகாந்த்

Updated On :

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வசூல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகனாக, வில்லனாக, சிறப்பு தோற்றத்தில் என தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக அளவில் அவரை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கிறது.

அன்றும் என்றும் சூப்பர்ஸ்டார் என்பது போல் தமிழ் சினிமாவின் வணிகத்திலும் மன்னனாக நிலைத்து நிற்கிறார். ஜெயிலர் முதல் பாகம் ரூ. 600 கோடிக்கும் வசூலித்து அசத்தியிருந்த நிலையில், தற்போது ஜெயிலர் - 2 திரைப்படம் ரூ 820 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழ் சினிமாவின் நம். 1 வசூல் திரைப்படமாக மாறியுள்ளது.

பேசாத, பேசும் தமிழ் சினிமாவின் நூறாண்டுக்கும் அதிகமாக வரலாற்றில் ஜெயிலர் - 2 மூலம் ரஜினியே இச்சாதனையைச் செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளையும் சேர்த்து இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவிற்கு தியாகராஜ பாகவதரிலிருந்து எவ்வளவோ சூப்பர்ஸ்டார் நடிகர்கள் வந்தாலும் வசூலிலும் செல்வாக்கிலும் ரஜினியே மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்!

The box office collection of actor Rajinikanth's film 'Jailer 2' has taken many by surprise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER