சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் இசையமைப்பாளர் தேவாவின் உடல்! விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்தொடர் விடுமுறை: சென்னை மாநகர் பேருந்துகளில் 3 நாள்களில் 4.15 லட்சம் பேர் பயணம்!சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்!

கொண்டாட்டம்... குத்தாட்டம்... ஜெயிலர் - 2 வசூல் இவ்வளவா?

ஜெயிலர் - 2 வசூல் குறித்து...

நடிகர் ரஜினிகாந்த்

Updated On :

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. டைகர் முத்துவேல் பாண்டியனான நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாகத்தில் சிலை கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்சன் காட்சிகளுடன் எடுத்திருந்தனர். முதல் பாகத்தை ஒப்பிட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களும் வந்ததால் பல பகுதிகளிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் 3 நாள் வசூலாக உலக அளவில் ரூ. 350 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இப்படத்தைக் கொண்டாடி வருவதால் தமிழிலேயே ரூ. 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும், அல்ல போலேலோ பாடலுக்கு கேரளத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து அங்கு திரையரங்குகளிலேயே ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர். தெலுங்கிலும் ஹிந்தியிலும் பெரிய கவனம் கிடைத்து வருகிறது.

இதனால், ஜெயிலர் - 2 திரைப்படம் குறைந்தது ரூ. 700 கோடி வசூலைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Information has been released about the box office collection of actor Rajinikanth's Jailer - 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.