75 வயதில் ரூ. 750 கோடி வசூல்!
ஜெயிலர் - 2 வசூல் குறித்து....

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.
இப்போதும் பல திரையரங்குகளில் இப்படத்திற்கான இருக்கைகள் ஹவுஸ்புல்லாக இருப்பதுடன் சில காட்சிகளை மீண்டும் போடச் சொல்லி ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்தாண்டின் மட்டுமல்லாது ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக ஜெயிலர் - 2 மாறி வருவதாகத் திரையரங்க உரிமையாளர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் உலக அளவில் ரூ. 750 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழில் மட்டும் இப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். மேலும், தெலுங்கில் ரூ. 80 கோடி, கேரளத்தில் ரூ. 70 கோடி, ஹிந்தியில் ரூ. 45 கோடி என வசூலித்துள்ளதகாவும் கூறப்படுகிறது. இதனால், முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
Information has emerged regarding the box office collection of actor Rajinikanth's film Jailer 2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


