புத்தகக் கொள்முதல் ஆணை இதோ! தவெக வெளியிட்ட புகைப்படம்!
புத்தகக் கொள்முதல் ஆணையை வெளியிட்டு, திமுகவுக்கு தவெக அளித்திருக்கும் பதிலில்,

பெரியார் அறிவுலகம். - DNS
கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தில் போலியான பதிப்பகங்களின் பெயர்களில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட கொள்முதல் ஆணை என்ற புகைப்படத்தை தவெக வெளியிட்டுள்ளது.
தவெக தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, இதுதான் புத்தகக் கொள்முதல் ஆணை என்று தெரிவித்துள்ளது. ஆனால், அதில் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதி மட்டும் கைகளால் எழுதப்பட்டுள்ளது.
தவெக வெளியிட்டிருக்கும் பதிலில்,
ஃபீனிக்ஸ் பதிப்பகம் என்பதே தங்களுக்கு தெரியாது என்பதுபோல மூளையற்ற திமுக முனகத் தொடங்கி உள்ளது. ஊழலில் ஊறித் திளைத்த உலக மகா யோக்கியர்கள் கொண்ட இயக்கம் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான். இருந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டாமல் விடக் கூடாது என்பதால் ஆதாரங்களை வெளியிட்டே ஆக வேண்டி உள்ளது.
ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு புத்தகக் கொள்முதல் ஆணையை தீயசக்தி திமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட ஆணை இதோ.
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.

அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக!
பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்தவரே, புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, டம்மி டேடி?முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்!
அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால்,
"இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன." என்று இருக்கிறது.
அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா?ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா?
பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது!
அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை? என்று தவெக கேள்வி எழுப்பியிருக்கிறது.
Summary
Here is the book procurement order A photograph released by TVK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

