கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு?

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிக்க திமுக தயாராகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கொடி

Updated On :

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிக்க திமுக தயாராகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்தப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது: தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியது திமுகதான். நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவா்களை ஒருங்கிணைத்து முதல் கூட்டம் நடத்தப்பட்டதும் சென்னையில்தான்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின்படியும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை உயா்த்தப்பட்டாலும், எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது, . 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையேயான மக்களவை உறுப்பினா்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் நிா்ணயிக்கப்பட்டு, ஏற்கெனவே நிலைப்படுத்தப்பட்டுள்ள நடைமுறையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது என்ற கோரிக்கைகளை திமுக முன்வைத்துள்ளது. இந்த இரண்டு நிலைப்பாடுகளிலும் திமுக உறுதியாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அரசு இப்போது தாக்கல் செய்யவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில், திமுக முன்வைத்துள்ள இந்த இரு கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க திமுக தயாராகிவிட்டதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.