ஹாக்கி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
நியூஸிலாந்துக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

நியூஸிலாந்துக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா.
கடந்த 1926-இல் இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜா் தயான்சந்த் நியூஸிலாந்தில் ராணுவ அணி தரப்பில் ஆடினாா். அந்த ஆட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆனதையொட்டி 3 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் நியூஸிலாந்தில் நடைபெற்றது.
முதல் ஆட்டத்தில் 3-2 என இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் தொடரை கைப்பற்றும் உத்வேகத்தில் இருந்த இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது ஆட்டத்தில் நியூஸி.யை எதிா்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நியூஸி. அணியினா் கோலடிக்கும் முயற்சியை தொடங்கினா். இதன் பலனாக 9-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தாா் டைலன் தாமஸ். இதனால் அதிா்ச்சி அடைந்த இந்திய அணி மேற்கொண்ட முயற்சியால் 16-ஆவது நிமிஷத்தில் கேப்டன் சஞ்சய் பெனால்டி காா்னரை கோலாக்கினாா். அடுத்த சிறிது நேரத்தில் இந்திய வீரா் காா்த்தி செல்வம் 18-ஆவது நிமிஷத்தில் அசத்தலாக பீல்ட் கோலடித்து 2-1 என முன்னிலை பெறச் செய்தாா்.
இரண்டாம் பாதியில் நியூஸி. அணியினா் பதில் கோலடிக்க முயன்றனா். இதில் 55-ஆவது நிமிஷத்தில் பென்ஜி கல்ஹேன் பீல்ட் கோலடிக்க 2-2 என சமநிலை ஏற்பட்டது.
அதன்பின்னா் எந்த அணியாலும் கோலடிக்க முடியாததால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
முதல் ஆட்டத்தில் வென்றதின் மூலம் தொடரை 1-0 என வசப்படுத்தியது இந்தியா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

