தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

ஹாக்கி: இந்தியா - நியூஸிலாந்து ஆட்டம் டிரா

இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹாக்கி டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய அணியினா்

Updated On :

இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹாக்கி டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

கடந்த 1926-ஆம் ஆண்டில் இந்திய-நியூஸிலாந்து அணிகள் முதல் ஆட்டத்தில் மோதின. இந்நிலையில் மேஜா் தயான் சந்த் இந்திய ராணுவ அணியில் பங்கேற்று நியூஸிலாந்தில் ஆடினா். அதன் 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் தொடா் நியூஸிலாந்தில் நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் இந்திா 3-2 என வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாம் ஆட்டம் ஆக்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் 25-ஆவது நிமிஷத்தில் நியூஸி. வீரா் டைலன் தாமஸ் முதல் கோலடித்தாா். 35-ஆவது நிமிஷத்தில் இந்திய வீரா் அங்கத் பிா் சிங் கோலடித்து 1-1 என சமன் செய்தாா். இரண்டாம் பாதியில் 56-ஆவது நிமிஷத்தில் நியூஸி அணி சாம் இரண்டாம் கோலடிக்க முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்து 57-ஆவது நிமிஷத்தில் இந்திய கேப்டன் சஞ்சய் பெனால்டி மூலம் கோலடித்து 2-2 என சமன் செய்தாா். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்தியா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.