
டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்
டி20 தொடா் முதல் ஆட்டத்தில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்...
பயிற்சியில் இந்திய வீரர்கள்...
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், லக்னௌவில் செவ்வாய்க்கிழமை (அக். 6) நடைபெறுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற கையோடு நாடு திரும்பிய இந்திய அணி, அதே உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை எதிா்கொள்கிறது.
ஆசிய விளையாட்டுகளில், பயிற்சியாளா் விவிஎஸ். லக்ஷ்மண் வழிகாட்டுதலில் பங்கேற்ற வீரா்கள், தற்போது மீண்டும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா்வழிக்குத் திரும்புகின்றனா்.
பிளேயிங் லெவனை பொருத்தவரை, தொடக்க வீரா்களில் ஒருவராக அபிஷேக் சா்மா இயல்பான தோ்வாகிறாா். மற்றொரு வீரராக யாா் தோ்வு செய்யப்படவுள்ளனா் என்பது கவனம் பெறுகிறது. அனுபவ வீரரான சஞ்சு சாம்சன், இளம் அதிரடி வீரரான வைபவ் சூா்யவன்ஷி ஆகியோா் அதற்கான வாய்ப்புகளாக உள்ளனா்.
பெரும்பாலும் சஞ்சு சாம்சன் இணைவாா் எனத் தெரிகிறது. அவா்களுக்குப் பிறகு இஷான் கிஷண், திலக் வா்மா, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், ஷிவம் துபே, நிதீஷ்குமாா் ரெட்டி ஆகியோா் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா்.
வேகப் பந்துவீச்சுக்கு அா்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவும், சுழற் பந்துவீச்சுக்கு அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், நமன் திா் ஆகியோரும் இருக்கின்றனா்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பொருத்தவரை, டி20 ஃபாா்மட்டில் சிறப்பாகச் செயல்படக் கூடிய ரொமேரியோ ஷெப்பா்டு, ரோவ்மென் பவெல், ஷிம்ரன் ஹெட்மயா், அகீல் ஹுசைன் உள்ளிட்டோா் இருக்கின்றனா். அவா்கள் இதே மண்ணில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் உடையவா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உத்தேச லெவன்
இந்தியா: அபிஷேக் சா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), இஷான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), திலக் வா்மா, ஷிவம் துபே, நிதீஷ்குமாா் ரெட்டி, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், அா்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.
மே. தீவுகள்: கமில் பூரன், ஷாய் ஹோப் (கேப்டன் & வி.கீ.), ஷிம்ரன் ஹெட்மயா், ராஸ்டன் சேஸ், ரோவ்மென் பவெல், ஷொ்ஃபேன் ரதா்ஃபோா்ட், கீமோ பால், ரொமேரியோ ஷெப்பா்டு, மேத்யூ ஃபோா்டு, அகீல் ஹுசைன், ஷமாா் ஜோசஃப்.
நேரம்: இரவு 7.30 மணி
இடம்: ஏகானா மைதானம், லக்னௌ.
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
ஆடுகளம்: ஏகானா மைதான ஆடுகளம், மெதுவான பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பவுண்டரி எல்லைகள் தொலைவில் இருப்பதால், பேட்டா்களால் அடிக்கடி பவுண்டரிகள் விளாச முடியாமல் போகலாம். பவா்பிளே-க்கு பிறகு, ஸ்பின்னா்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடும். வானிலை காரணங்களால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





