மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டனை பாராட்டியாக வேண்டும்: சஞ்சு சாம்சன்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக சஞ்சு சாம்சன் பாராட்டியுள்ளார்.

சஞ்சு சாம்சன் - படம் | ANI
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக சஞ்சு சாம்சன் பாராட்டியுள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று (அக்டோபர் 14) ஹைதராபாதில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளதால், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது சமனில் உள்ளது.
இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப், நேற்றைய ஆட்டத்திலும் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். அதிரடியாக விளையாடிய அவர் 50 பந்துகளில் 102* ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் சாய் ஹோப் - படம் | AP
இந்த நிலையில், ஹைதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக சஞ்சு சாம்சன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் உண்மையில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஆட்டத்துக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர் அதிகமாக ரிஸ்க் எடுக்காமல் மிகவும் சிறப்பான கிரிக்கெட்டிங் ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடுகிறார். அவரது சிறப்பான பேட்டிங்குக்கு எதிராக சவாலளிக்கும் விதமாக நாங்கள் பந்துவீச வேண்டும் என்றார்.
தொடர் சமனில் இருக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (அக்டோபர் 17) பெங்களூருவில் நடைபெறுகிறது.
Summary
Sanju Samson has praised West Indies captain Shai Hope for his excellent performance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


