ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இந்திய அணியின் பேட்டர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முன்னாள் கேப்டன்

இந்திய அணியின் பேட்டர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

படம் | பிசிசிஐ

Updated On :

இந்திய அணியின் பேட்டர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான நான்காவது டி20 போட்டி ஹைதராபாதில் நேற்று (அக்டோபர் 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 248 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தோல்வியடைந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி சேஸிங்கில் தங்களை முதலில் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்திய அணியின் பேட்டர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும். பேட்டர்கள் பொறுப்பினை எடுத்துக் கொள்ளாவிட்டால், இந்திய அணி வெற்றி பெறாது. இதுபோன்ற பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளங்களில் இரண்டு முறை தொடர்ச்சியாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஹைதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் இது எதுவுமே நடைபெறவில்லை.

சஞ்சு சாம்சன் அணிக்கு மிகவும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தார். ஆனால், மற்ற பேட்டர்கள் யாரும் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அபிஷேக் சர்மா அவரது தரத்துக்கு ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கீமோ பால் விரித்த வலையில் இஷான் கிஷன் விக்கெட்டினை பறிகொடுத்தார். சதம் விளாசியதிலிருந்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடமிருந்து பெரிய ரன்கள் வரவில்லை என்றார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (அக்டோபர் 17) பெங்களூருவில் நடைபெறுகிறது.

Summary

Former Indian captain Sunil Gavaskar has stated that the Indian team's batters need to play with greater responsibility.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.