இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு!
இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைந்தது குறித்து...

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் யத்விந்தர் சிங் - எக்ஸ்
இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன், யாடா சுரக்புரியா எனும் யத்விந்தர் சிங் இன்று (நவ. 20) பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் சுல்தான்பூர் லோதியின் சுரக்பூர் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரான யத்விந்தர் சிங், உலக அரங்கில் தனது விளையாட்டு சாதனைகள் மூலம் பஞ்சாபுக்குப் பெருமை சேர்த்தவர் என முதல்வர் பகவந்த் மான் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுபற்றி, பஞ்சாப் முதல்வர் கூறுகையில்,
“யத்விந்தர் சிங் போன்ற விளையாட்டுத் தலைவர்கள் ஆம் ஆத்மியில் இணைவதன் மூலம் நம் மாநிலத்தில் விளையாட்டுக் கலாசாரத்தை ஊக்குவிக்கவும், இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து விலக்கி வைக்கவும் மேற்கொள்ளப்படும் நமது முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் வரும் 2027 ஆம் ஆண்டு 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian kabaddi team captain Yadvinder Singh has joined the Aam Aadmi Party.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


