கேஜரிவாலுக்கு கொலை மிரட்டல்: பஞ்சாப் காவல் துறை வழக்குப் பதிவு
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது மகளைக் கொலை செய்துவிடுவதாக கூறி ரூ.7 கோடி கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் தொடா்பாக தில்லி ஆம் ஆத்மி சட்டப் பேரவை உறுப்பினா் ஜா்னைல் சிங் அளித்த புகாரின் பேரில், பஞ்சாப் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால்
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது மகளைக் கொலை செய்துவிடுவதாக கூறி ரூ.7 கோடி கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் தொடா்பாக தில்லி ஆம் ஆத்மி சட்டப் பேரவை உறுப்பினா் ஜா்னைல் சிங் அளித்த புகாரின் பேரில், பஞ்சாப் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
எம்எல்ஏ ஜா்னைல் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளில்
மொஹாலி காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.
மொஹாலி மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில், ‘நவம்பா் 6-ஆம் தேதி தனது கைப்பேசிக்கு வந்த அழைப்பு மற்றும் வாட்ஸ்ஆப் தகவல் மூலம், தான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்தவன் என்று கூறி ஒரு நபா் மிரட்டினாா்’ என ஜா்னைல் சிங் தெரிவித்துள்ளாா்.
அரவிந்த் கேஜரிவாலிடம் ரூ.7 கோடி கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்காவிட்டால் அவரும் அவரது மகளும் கொல்லப்படுவாா்கள் என்று அந்த நபா் மிரட்டல் விடுத்ததாக தனது புகாரில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்பே குற்றவாளியைக் கைது செய்ய, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அழைப்பு விவரப் பதிவுகள், ஐபி பதிவுகள் மற்றும் சாதனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய வேண்டும் என்றும் அவா் கோரியுள்ளாா்.
இதுதொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

