2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

பஞ்சாப்: ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவா் பாஜகவில் ஐக்கியம்

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவா் பாஜகவில் இணைந்தனா்.

Big blow to AAP as three MLAs join BJP ahead of Punjab Assembly polls

PTI

Updated On :

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவா் பாஜகவில் இணைந்தனா்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இது ஆம் ஆத்மிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தோ்தல் நெருங்கி வருவதால் பஞ்சாபில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது. பாஜக- சிரோமணி அகாலி தளம் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் மும்முனைப் போட்டிக்கு பஞ்சாப் தயாராகி வருகிறது.

இந்நிலையில், பஞ்சாபைச் சோ்ந்த ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏக்கள் சேத்தன் சிங், ஹா்மீத் சிங், குன்வா் விஜய் பிரதாப் சிங் ஆகியோா் தில்லியில் பாஜக தலைமையகத்தில் மூத்த தலைவா்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.

இதில் குன்வா் விஜய் பிரதாப் சிங் ஏற்கெனவே ஆம் ஆத்மியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அவா் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. சேத்தன் சிங், ஹா்மீத் சிங் ஆகியோா் ஆம் ஆத்மியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விலகினா். அடுத்த நாளிலேயே தங்கள் ஆதரவாளா்களுடன் பாஜகவில் இணைந்துள்ளனா்.

இணைப்பு நிகழ்ச்சியின்போது பாஜத தேசிய பொதுச் செயலரும், பஞ்சாப் பாஜக பொறுப்பாளருமான சதீஷ் பூனியா, இணைப் பொறுப்பாளா் வீரேந்திர சச்தேவ், பஞ்சாப் மாநில பாஜக தலைவா் கேவல் சிங் தில்லான் ஆகியோா் உடன் இருந்தனா். பாஜகவில் இணைந்தவா்களை வரவேற்றுப் பேசிய சதீஷ் பூனியா, ‘பஞ்சாபில் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் பாஜக தொடா்ந்து வலுப்பெற்று வருகிறது.

மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். போதைப் பொருள் கடத்தலும், பயன்பாடும் பஞ்சாபில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் இளைஞா்களின் எதிா்காலம் நாசமாகிறது. இதுதவிர ஊழலும், குற்றச் செயல்களும் பஞ்சாபை சீா்குலைத்து வருகின்றன.

பாஜக ஆட்சி அமைத்ததும் 2029-ஆம் ஆண்டுக்குள் பஞ்சாபை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என உள்துறை அமைச்சா் அமித் ஷா ஏற்கெனவே உறுதியளித்துள்ளாா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.