தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!எஸ்ஐஆர்! கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்!காங்கிரஸ் பகிர்ந்த போலியான ராணுவ விடியோக்கள்! மன்னிப்புக் கோர கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த உதயநிதி!

பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதல்!

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது பற்றி..

Clash between AAP and Congress MLAs

ஆம் ஆத்மி - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதல் - X

Updated On :

பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

பஞ்சாப் சட்டப்பேரவையின் இறுதி நாள் கூட்டத்தொடரின்போது இந்த அதிரடி அரசியல் மோதல் அரங்கேறியுள்ளது. இந்த மோதல் போக்கையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுக்பால் சிங் கைரா, பிரதாப் சிங பாஜ்வா மற்றும் பர்கத் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஜஸ்வீர் சிங் ராஜா கில்லுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மோதலுக்கான காரணம்?

போதைப்பொருள் தடுப்பு ஆர்வலர் பர்விந்தர் சிங் ஜோட்டா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா, அவையின் விதிகளை மீறியதாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த இடைநீக்க உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

பேரவை வளாகத்திற்கு நுழைய தடை

இடைநீக்கம் செய்யப்பட்ட சுக்பால் சிங் கைரா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா, பர்கத் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைய விடாமல் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவைத்தலைவரின் கையெழுத்து இல்லாத பாதுகாப்பு நோட்டீஸை காட்டி தங்களை தடுத்ததாக காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்பட்ட நிலையில், பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஜஸ்விர் சிங் ராஜா கில் மற்றும் முன்னாள் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் ஆகியோர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் நேரடியாக மோதினர்.

தள்ளுமுள்ளு

வாக்குவாதம் முற்றியதில் இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ.க்களான சரப்ஜித் கௌர் மானுகே மற்றும் இந்தர்ஜித் கெளர் மான் ஆகியோரும் தலையிட்டு ஊடகங்கள் முன் முழக்கமிட்டனர்.

பிரதாப் சிங் பாஜ்வா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர் சட்டப்பேரவைக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவது, பஞ்சாப் வரலாற்றிலேயே இதுவரை நடந்ததில்லை. சுக்ல் சிங் கை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவருக்குச் சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைய உரிமை உண்டு. பஞ்சாப் சட்டப்பேரவையா? காபூலா? இங்கே தலிபான் ஆட்சி நடக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

புறக்கணிப்பு

இந்த அராஜகப் போக்கைக் கண்டித்தும், தங்களது நுழைவு தடுக்கப்பட்டதற்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பஞ்சாப் சட்டப்பேரவையின் இறுதி நாள் கூட்டத்தொடரை முழுமையாகப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

துடைப்பத்தை எரித்து போராட்டம்

முன்னதாக, பல்வேறு முக்கியப் பிரச்னைகளில் அரசின் தோல்விகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வெளியே, ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னமான துடைப்பத்தை எரித்தனர். கருப்பு அங்கி அணிந்து, பதாகைகளை ஏந்தியபடி, பேரவை உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.