வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜிநாமா செய்திருப்பது பற்றி....

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் (கோப்புப் படம்) - PTI
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை அறிவித்தது. முதல்வர் பகவந்த் மான் மீண்டும் துரி தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வேட்பாளர் தேர்வு முறை, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இந்த முதல் பட்டியலில் இடம்பெறவில்லை.
இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கட்சி மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை ஞாயிற்றுக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தனர். சனூர் தொகுதியின் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா மற்றும் சமானா தொகுதியின் சேதன் சிங் ஜோராமஜ்ரா ஆகியோர் தங்களது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், இந்த ராஜிநாமாக்கள் நிகழ்ந்துள்ளன. இது தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
Summary
Two Aam Aadmi Party (AAP) legislators, Harmeet Singh Pathanmajra and Chetan Singh Jouramajra, have resigned from the Punjab Assembly shortly after the party announced its first list of candidates for the 2027 state elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


