குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!

உ.பி. தேர்தல்: ஆம் ஆத்மி உடன் சமாஜவாதி தொகுதிப் பங்கீடு பேச்சு! பிரசாரத்தில் சிஜேபி?

உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் சமாஜவாதி கூட்டணிக்கு ஆதரவாக சிஜேபி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு...

Akhilesh discusses seat-sharing with AAP, CPI(ML) ahead of UP polls

சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே - அகிலேஷ் யாதவ் - அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா... - கோப்புப் படம்

Updated On :

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜவாதி கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) முக்கிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிட, தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கை, இன்று (நவ. 20) சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

ஏற்கெனவே, இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) பொதுச் செயலர் திபாங்கர் பட்டாச்சார்யாவை நேற்று அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

மேலும், பெரும் கட்சிகளான காங்கிரஸ் - சமாஜவாதி இடையே விரைவில் தொகுதிப் பங்கீடு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சமாஜவாதி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக சிஜேபியின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆம் ஆத்மி மற்றும் சிபிஐ (எம்-எல்) ஆகிய கட்சிகளுக்கு கூட்டணியில் தொகுதிகள் வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் மூலம் மக்களிடையே ஆதரவைப் பெற்ற, சிஜேபியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மற்றும் மூத்த நிர்வாகி அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர்கள்.

மேலும், சிபிஐ (எம்-எல்) மாணவர் பிரிவான அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவர் நேஹா போராவும் இந்தப் போராட்டங்கள் மூலம் நன்கு அறியப்படுகிறார். இதனால், அக்கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டால், சமாஜவாதிக்கு ஆதரவாக இளம் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Key leaders of the CJP are expected to campaign in support of the Samajwadi Party-led alliance in the UP Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.