உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!
உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலுக்கான தங்களது வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது குறித்து...

பாஜக கொடி - கோப்புப் படம்
உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலுக்கான தங்களது வேட்பாளர்களை பாஜக திங்கள்கிழமை (அக். 5) அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 இடங்களுக்கு மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. கட்சி எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் ஆளும் பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் ஆதரவுடன் சமாஜவாதி இரு இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இந்தத் தேர்தலானது, வரும் அக். 16 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக தனது 8 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது.
இந்த மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக தரம்பால் சிங், ராதாகாந்த் ஓஜா, பிரகாஷ் பால், வித்யாசாகர் சோங்கர், கோபி கிருஷ்ண பாண்டே, பிரியங்கா சிங் ராவத், ராம் பிரதாப் சிங், ஷ்ருதி கங்வார் ஆகியோரை பாஜக மத்திய தேர்தல் குழு அங்கீகரித்துள்ளது.
முன்னதாக, சமாஜவாதி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், தன்ராஜ் பரிமல் நட்வானி ஆகியோர் புதன்கிழமை (செப். 30) வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The BJP announced its candidates for the Rajya Sabha elections in Uttar Pradesh on Monday (Oct. 5).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







