ஆட்ட நாயகன் விருதுகள் கூடுதல் எடையுடன் இருப்பதால் வீடு திரும்புவதில் பிரச்னை: ஷாய் ஹோப்
இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஷாய் ஹோப் பேசியிருப்பதாவது...

ஆட்ட நாயகன் விருது பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் - படம்: பிசிசிஐ
இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப், “ஆட்ட நாயகன் விருதுகள் அதிக எடையுடன் இருப்பதால், பயணச் சுமையின் எடையைப் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
ஹைதராபாதில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 247/3 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்தியா 19.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் 50 பந்துகளில் 102 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
இத்துடன், இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மட்டுமே இந்தியாவுக்கு எதிராக 4 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். ஆட்ட நாயகன் விருது வென்ற ஷாய் ஹோப் பேசியிருப்பதாவது:
உண்மையில் இந்த ஆட்ட நாயகன் விருதுகள் சற்று கூடுதல் எடையுடன் இருக்கின்றன. பயணச் சுமையின் (லக்கேஜ்) எடை எவ்வளவு என்று பார்க்க வேண்டும். வீட்டிற்குத் திரும்பிச் செல்வதில் பிரச்னை ஏற்படுமென நினைக்கிறேன் (சிரிக்கிறார்).
பேட்டிங்கில் நல்ல அடித்தளமிட்டது உதவியது. தட்டையான ஆடுகளம் எனத் தெரியும், இருப்பினும் 240+ ரன்கள் என்பது ஓரளவுக்கு போதுமானதாக இருந்தது. பேட்டிங் விளையாடும்போது பந்து சற்று நின்று வந்தது.
இந்த டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஒருவருக்கு 3 ஓவர்கள் தருவது கடினம். பந்துவீச்சாளர்களும் தொடர்ச்சியாக நன்றாக பந்துவீசுவது கடினம். பெங்களூருவில் நடக்கும் போட்டிக்காக காத்திருக்கிறேன் என்றார்.
Summary
Shai Hope is going back home with a lot of extra luggage becase of man of the match awards weights are high
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


