ஐபிஎல் ஏலத்தில் சாய் ஹோப் பதிவு செய்தால்... வைரலாகும் கெவின் பீட்டர்சனின் பதிவு!
ஐபிஎல் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் அவருடைய பெயரை பதிவு செய்வது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.

சாய் ஹோப் - படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
ஐபிஎல் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் அவருடைய பெயரை பதிவு செய்வது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் விளாசி அசத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப், டி20 தொடரிலும் அவரது அதிரடியைத் தொடர்கிறார். முதல் டி20 போட்டியில் அரைசதம் விளாசிய அவர், ராஞ்சியில் நேற்று (அக்டோபர் 9) நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் சதம் விளாசி அசத்தினார். நேற்றையப் போட்டியில் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திப் பிடித்து சாதனை படைத்தது மேற்கிந்தியத் தீவுகள்.
நேற்றைய ஆட்டத்தில் 45 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசிய சாய் ஹோப், இரண்டு போட்டிகளையும் சேர்த்து 154 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 187 ஆக உள்ளது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் குறித்து கெவின் பீட்டர்சன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஐபிஎல் மினி ஏலத்தில் சாய் ஹோப் அவரது பெயரை பதிவு செய்தால், சில மேஜைகளிலிருந்து அவரை ஏலம் எடுப்பதற்காக கைகள் உயரும் எனப் பதிவிட்டுள்ளார்.
If Shai Hope puts his name into mini IPL auction, there might be some paddles in the air from a few tables
— Kevin Pietersenð¦ (@KP24) October 10, 2026
கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு இடைவெளியில் 26 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் ஹோப் 493 ரன்கள் எடுத்துள்ளார். அதன் பின், கடந்த 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது ஆட்டம் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு 46 போட்டிகளில் 1404 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள ஐந்தாவது வீரர் சாய் ஹோப் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1897 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இதுவரை 232 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சாய் ஹோப் 6246 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Former England player Kevin Pietersen has spoken about West Indies captain Shai Hope registering his name for the IPL auction.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


