மனைவியின் அறிவுரையின்படி... பிறந்த நாளில் பதிவிட்ட சஞ்சு சாம்சன்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து...

தனது மனைவியுடன் சஞ்சு சாம்சன் - படங்கள்: இன்ஸ்டா / சஞ்சு சாம்சன்
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தனது பிறந்த நாளில் மனைவியின் அறிவுரையின்படி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணி 2026 உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்தார். தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு 11:11 சேட்டனுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளது.
இன்ஸ்டாவில் குறைவாக புகைப்படங்களைப் பதிவிடும் சஞ்சு சாம்சன் தனது மனைவியின் அறிவுரையினால் பிறந்த நாளில் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சுய கொண்டாட்டம் முக்கியம் என யாரோ ஒருவர் (சாருலதா ரமேஷ்) எனக்குக் கூறியிருந்தார். அதனால், இன்று 11/11 எனது பிறந்த நாளில் எனக்குப் பிடித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, நல்ல இசையுடன் நானே கொண்டாடுகிறேன்.
என்னை வாழ்த்தி அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அன்புக்கும் நன்றிகள். ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் மூத்த வீரராக இருக்கும் சஞ்சு சாம்சன் விரைவில் கேப்டனாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்களிடம் இருக்கிறது.
ðð:ðð â¨
— Chennai Super Kings (@ChennaiIPL) November 10, 2026
Make a wish for our Chettan! ð¥³ð#WhistlePodu #HBDSanju
Summary
Following his wife's advice... Sanju Samson posts on his birthday!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


