விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

இந்திய டி20 அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டி குறித்து...

Sanju Samson elated after scoring a half-century.

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன் - படம்: எக்ஸ் / பிசிசிஐ

Published On :

இந்திய டி20 அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில், “களத்துக்கு வெளியே வரும் சப்தங்களை எப்படி கையாள்வது என கற்றுக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 2-0 என தொடரை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 159/8 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து விளையாடிய இந்தியா 14.5 ஓவர்களில் 163/3 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியிருப்பதாவது:

களத்துக்கு வெளியே வரும் சப்தங்களைக் கண்டுக்கொள்ளாமல் இருக்க, வீட்டில் வை-ஃபை ஆன் செய்ய மாட்டேன். சில நேரங்களில் வை-ஃபை ஆன் செய்யப்பட்டால் மூத்த வீரர்களின் கமெண்ட்ஸ்களைப் பார்ப்பேன். இது சாதாரணமானதுதான்; அது அவர்களுடை கருத்து அவ்வளவுதான்.

சில நேரங்களில் அவர்களது மனதைப் பொறுத்து கருத்துகள் மாறுபடும். அது முழுக்க முழுக்க அவர்களைச் சேர்ந்தது. இதை எல்லாம் எப்படி கையாள்வது என்பதில் நான் முதிர்ச்சி அடைந்து விட்டேன் என நினைக்கிறேன்.

தொடக்கத்தில் மோசமான உணர்ந்தேன். நான் ஒன்றும் இயந்திரம் அல்ல; ரோபோட் கிடையாது அல்லவா? அதுவும் சில நேரங்களில் நம்மை பாதிக்கவே செய்கிறது. ஆனால், நாம் நமக்குள்ளாகவே பேசிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் யார்? நமக்கு என்ன தேவை எனப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இருக்கும் வீரர்களுக்கு வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், உங்களது மனநிலையில் தெளிவாக இருக்க வேண்டும். எப்படி தயார் ஆகுவீர்கள்? எப்படி விளையாட வேண்டும்? என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

வெளியில் வரும் விமர்சனங்களுக்கு நான் கவனம் செலுத்தினால் என்னால் இப்படி பேட்டிங் விளையாட முடியாது. பேட்டிங்கிற்கு முன்பாக 10 முறை யோசிப்பேன். ஆட்டமிழந்தால் வை-ஃபை பிரச்னை வரும். ஆனால், என்னுடைய சர்வதேச பயணம் நன்றாகவே சென்றுள்ளது.

என்ன விதமான அழுத்தமாக இருந்தாலும் நாம் எந்த மாதிரியான வீரர் என்பதைப் புரிந்து அதற்கேற்ப விளையாட வேண்டும். அணியின் நலனை மட்டுமே முன்னிறுத்தி தைரியமாக விளையாட வேண்டும் என்றார்.

Summary

How to handle criticism? Sanju Samson opens up!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.