
மகளிர் பிரீமியர் லீக் 2027: ஏலம், போட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு!
மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான போட்டிகள் நடைபெறும் தேதிகள் குறித்து...

மகளிர் பிரீமியர் லீக் போஸ்டர். - படம்: எக்ஸ் / டபிள்யூபிஎல்டி20
இந்தியாவில் நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் 2027 சீசனுக்கான போட்டிகள் நடைபெறும் தேதிகளை அதிகாரபூர்வமாக பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆடவருக்காக நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போலவே மகளிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) போட்டிகளை பிசிசிஐ நடத்துக்கின்றன. முதல் சீசன் 2023ல் நடைபெற்றது.
நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் 2027ஆம் ஆண்டில் ஜனவரி 14 முதல் பிப்,7ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
இதற்கான ஏலம் வரும் அக்.28ஆம் தேதி கொச்சியில் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மகளிர் கிரிக்கெட்டில் உலகின் மிகப்பெரிய டி20 லீக்கான டாடா டபிள்யூபிஎல் விளையாட்டின் முன்னேற்றத்துக்காக தன்னை முன்னிறுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளுடன் உலகின் அனைத்து வீராங்கனைகளும் உயர்தர கிரிக்கெட்டில் பங்கேற்று தங்கள் திறமைகளை வளர்க்க வாய்ப்பினை உருவாக்குகிறது.
வீராங்கனைகளை தக்கவைப்பதற்கான கடைசி தேதி செப்.28ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசனுக்கான யார் யார் எந்தெந்த இடத்தில் தேவையோ அவர்களை எல்லாம் ஐந்து அணிகளும் தக்கவைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
ð¨ News ð¨ #TATAWPL 2027 to be played from 14 January to 7 February 2027 ðï¸
— Women's Premier League (WPL) (@wplt20) September 16, 2026
Player Auction to be held on 28 October 2026 in Kochi ð
More details â¶ï¸ https://t.co/tuEXkaaY6T pic.twitter.com/mjLcSOJawp
Summary
Women's Premier League WPL 2027 to staged from January 14 to February 7
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








