
நியூகேஸலை நொறுக்கிய லீட்ஸ்..! பிரீமியர் லீக்கில் தொடரும் வெற்றி முகம்!
பிரீமியர் லீக்கில் 2026/27 சீசனில் புதிய வரவான லீட்ஸ் யுனைடெட் அணியின் வெற்றி முகம் குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் லீட்ஸ் யுனைடெட் வீரர்கள். - படம்: ஏபி
இங்கிலாந்தில் நடைபெறு பிரீமியர் லீக்கில் 2026/27 சீசனில் புதிய வரவான லீட்ஸ் யுனைடெட் அணியின் வெற்றி முகம் தொடர்ந்து கொண்டே வருகிறது.
லீட்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் நியூகேஸல் அணியை அடித்து நொறுக்கியது. இந்த வெற்றியுடன் லீட்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
லீட்ஸ் தனது சொந்த மண்ணில் இந்தப் போட்டியில் நியூகேஸல் உடன் மோதியது. இதில், 32ஆவது நிமிஷத்டில் ஓன் கோல் மூலமாக லீட்ஸுக்கு முதல் கோல் கிடைத்தது. அடுத்ததாக 34, 45+1, 59ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்கள்.
நியூகேஸல் அணி 90ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளுமே 50 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள்.
மொத்தமாக 14 ஷாட்டுகளில் 7 முறை இலக்கை நோக்கி அடித்த லீட்ஸ் அணி 2 முறை ஆஃப்ஸைடாகச் சென்றது. 425 பாஸ்களில் 86 சதவிகித துல்லியத்துடன் பாஸ் செய்தார்கள்.
மூன்று சீசன்களுக்குப் பிறகு மீண்டும் பிரீமியர் லீக்கில் விளையாடும் லீட்ஸ் யுனைடெட் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 சமன் என தோல்வியே காணாமல் விளையாடி வருகிறது/.
பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்
1. ஆர்செனல் - 12 புள்ளிகள்
2. மான்செஸ்டர் சிட்டி - 12 புள்ளிகள்
3. லீட்ஸ் யுனைடெட் - 8 புள்ளிகள்
4. ஹல் சிட்டி - 8 புள்ளிகள்
5. பிரைடன் - 7 புள்ளிகள்
6. செல்ஸி - 7 புள்ளிகள்
Summary
Premier League 2026/27 season: Leeds go third with four-goal rout of hapless Newcastle
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






