
வீரர்கள் மோதலால் ரெட் கார்டு: பிரீமியர் லீக்கில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் ஆர்செனல்!
நடப்பு சாம்பியன் ஆர்செனல் அணி பிரீமியர் லீக்கில் முதலிடம் பிடித்தது குறித்து...

பிரீமியர் லீக்கில் மோதிக்கொண்ட வீரர்கள். - படம்: ஏபி
நடப்பு சாம்பியன் ஆர்செனல் கால்பந்து அணி பிரீமியர் லீக்கில் முதலிடம் பிடித்துள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
சுந்தர்லேண்ட் உடன் மோதிய ஆர்செனல் அணி 2-0 என வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் இருந்தன.
இரண்டாவது பாதியில் 58ஆவது நிமிஷத்தில் ப்ரூனோ குய்மரோஸ் கோல் அடித்தார். 90+6ஆவது நிமிஷத்தில் சுந்தர்லேண்ட் வீரருக்கு மண்டவாவுக்கு ரெட் கார்டு அளித்ததால், ஆர்செனலுக்கு பெனால்டி கிடைத்தது.
அந்த பெனால்டி வாய்ப்பில் புகாயோ சகா 90+8ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். 2-0 என ஆர்செனல் இந்தப் போட்டியில் வென்றது.
இந்தப் போட்டியில் 58 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள். 403 பாஸ்களை 85 சதவிகித துல்லியத்துடன் செய்து அசத்தினார்கள்.
பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்
1. ஆர்செனல் - 12 புள்ளிகள்
2. மான்செஸ்டர் சிட்டி - 9 புள்ளிகள்
3. ஹல் சிட்டி - 8 புள்ளிகள்
4. செல்ஸி - 7 புள்ளிகள்
5. பிரெண்ட்ஃபோர்ட் -6 புள்ளிகள்
6. லிவர்பூல் - 6 புள்ளிகள்
Referee had staked a yellow card on Gabriel. pic.twitter.com/x3gcY4Szd3
— Eddie (@Eddieug10Ug) September 13, 2026
Summary
Arsenal goes clear on top of the Premier League, Liverpool and Chelsea stumble
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







