
3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் ஏலம்!
இந்தியன் பிரீமியர் லீக் ஏலம் இந்தியாவில் நடத்தப்பட இருப்பது குறித்து...

இந்தியன் பிரீமியர் லீக் ஏலம் - படம்: பிசிசிஐ
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மீண்டும் இந்தியாவிலேயே நடத்தப்பட இருப்பதாக அதன் தலைவர் அருண் துமல் கூறியுள்ளார். வரும் டிசம்பரில் மினி ஏலம் இந்தியாவிலேயே நடத்தபட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் ஐபிஎல் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் வணிக ரீதியில் மிகவும் அதிகமான லாபத்தை ஈட்டுவதாக ஐபிஎல் தொடர் இருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் பொது ஏலத்தின் மூலம் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மெகா ஏலம் நடைபெறும். அதற்கு முன்பாக மினி ஏலங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றன.
கடைசியாக நடந்த ஐபிஎல் ஏலங்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலேயே நடந்துள்ளன. கடைசி மூன்று முறையும் துபை, ஜெட்டா, அபு தாபியில் நடந்தன.
2024 சீசன்: துபை
2025 சீசன்: மெகா ஏலம் (ஜெட்டா)
2026 சீசன்: மினி ஏலம் (அபுதாபி)
2027 சீசன்: மினி ஏலம் ( இந்தியா)
இது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமல் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்தவே திட்டமிடுவோம். திருமண சீசன் என்பதால் எப்போதுமே நமக்கான இடங்கள் கிடைப்பதில்லை. அதனால், இந்தாண்டு நிச்சயமாக இங்கு நடைபெறும். மினி ஏலம் என்பதால் நிச்சயமாக இடம் கிடைக்குமென நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
Summary
IPL auction to make India return, says league chairman Arun Dhumal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








