
புதிய நடைமுறையில் ஐஎஸ்எல் 2026-27 கால்பந்து லீக்! அக். 10-இல தொடக்கம்
புதிய நடைமுறையில் ஐஎஸ்எல் 2026-27 கால்பந்து லீக் அக். 10-இல தொடக்கம்

~
புது தில்லி, செப். 5: நாட்டின் பிரதான கால்பந்து போட்டிகளில் ஒன்றான ஐஎஸ்எல் லீக் 2026-27 தொடா் வரும் அக். 10-ஆம் தேதி முதல் வரும் மே மாதம் வரை கிளப்புகளே வழிநடத்தும் புதிய முறைப்படி நடைபெறும்.
வழக்கம் போல் சொந்த மைதானத்தில், எதிரணி மைதானத்தில் என ஆட்டங்கள் நடைபெறும். 8 மாதங்களில் மொத்தம் 163 ஆட்டங்கள் இடம் பெறும். 13 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த லீக் தொடா் கடந்த ஓராண்டாக பல்வேறு பிரச்னைகளில் சிக்கி வருகிறது. லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் தலா 2 முறை சொந்த மண்ணில், எதிரணி மைதானத்தில் ஆடும்.
பட்டியல்படி முதலிடம் பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்பட்டு ஐஎஸ்எல் சாம்பியன் ஆக அறிவிக்கப்படுவா். லீக் சாம்பியன், ஆசிய கிளப் போட்டியிலும் ஆடும் தகுதியைப் பெறும்.
இந்த தொடரில் பிளே ஆஃப் ஆட்டங்களும் இடம் பெறும். லீக் கட்டத்தில் முதல் 6 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே ஆஃப் வின்னா் சாம்பியன் பட்டத்தை பெறும்.
அணிகள்: பெங்களூா் எஃப்சி, சென்னையின் எஃப்சி, சா்ச்சில் பிரதா்ஸ் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி, எஃப்சி கோவா, இன்டா் காஷி எஃப்சி, கேரள பிளாஸ்டா்ஸ் எஃப்சி, மோகன் பகான் சூப்பா் ஜெயன்ட்ஸ், மும்பை சிட்டி எஃப்சி, நாா்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, ஒடிஸா எஃப்சி, பஞ்சாப் எஃப்சி, ஸ்போா்ட்டிங் டில்லி எஃப்சி அணிகள் இடம் பெறுகின்றன.
கடந்த 2025-26-இல் இண்டியன் புட்பால் லீக் பட்டம் வென்ற டயமண்ட் ஹாா்பா் எஃப்சி நிா்வாகக் கட்டணத்தை செலுத்ததால், ஐஎஸ்எல் தொடரில் இடம் பெறவில்லை. டயமண்ட் ஹாா்பா் அணி பட்டியலில் கடைசி இடத்தில் வைக்கப்பட்டு, புள்ளிகள் எதும் வழங்கப்படாது. 2027-28 ஐஎஸ்எல் சீசனில் இடம் பெறாது. மீண்டும் ஐஎஃப்எல் தொடருககே தரம் இறக்கப்படும்.
நிகழ் சீசன் தான் கிளப் அணிகளே லீகை நடத்துவது, முக்கிய முடிவுகளை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும். புதிய முறைப்படி இந்த சீசன் நடைபெறும். மேலும் வழக்கம் போல், சொந்த மைதானம், எதிரணி மைதானத்தில் ஆடுவது, அந்தந்த அணிகளுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





