ஐரோப்பா டி20 பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அஜிங்க்யா ரஹானே விளையாடவுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வை அறிவித்த சிறிது நாள்களிலேயே அவர் ஐரோப்பா டி20 பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார். அவர் ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
ஐரோப்பா டி20 பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது.
Class meets firepower. ðð¥
— European T20 Premier League (ETPL) (@etplofficial) August 7, 2026
Ajinkya Rahane is bringing his signature style and big-stage brilliance to the Amsterdam Flames this season!
How excited are you Flames fans? pic.twitter.com/myqcNwpY41
ஐரோப்பா டி20 லீக் தொடரில் விளையாடவுள்ளது குறித்து அஜிங்க்யா ரஹானே பேசியதாவது: இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நாளே எனக்கு இந்த மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது. ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஸ்டீவ் வாக் என்னை தொலைபேசியில் அழைத்து உங்களால் ஆம்ஸ்டர்டாம் அணிக்காக விளையாட முடியுமா என்று கேட்டார். நான் ஒரு நாள் யோசித்த பிறகு, ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் அணிக்காக விளையாட முடிவெடுத்தேன்.
எனக்கு நிறைய கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அதனால், என்னுடைய அனுபவங்களை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களுடன் பகிர்ந்துகொள்ள கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பாக இதனைக் கருதினேன். அதனால், ஐரோப்பா டி20 பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
38 வயதாகும் அஜிங்க்யா ரஹானே இந்திய அணிக்காக 195 போட்டிகளில் விளையாடி 8414 ரன்கள் குவித்துள்ளார். அதில் 15 சதங்கள் மற்றும் 51 அரைசதங்கள் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 188.
ஐபிஎல் தொடரில் ரஹானே 197 போட்டிகளில் விளையாடி 5367 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 105*. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ரஹானே 8-வது இடத்தில் உள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Ajinkya Rahane is set to play in the Europe T20 Premier League cricket tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றுமுதல் டிஎன்பிஎல் கிரிக்கெட்!

அஜிங்க்யா ரஹானேதான் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர்: விராட் கோலி

அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமையட்டும்; ரஹானேவுக்கு புஜாரா வாழ்த்து!

ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp




